Home » கன்னியாகுமரி செய்திகள் » களியக்காவிளை அருகே தடையை மீறி உண்ணாவிரதம்; பா.ஜனதாவினர் கைது – பதட்டம் நிலவியதால் போலீசார் குவிப்பு

களியக்காவிளை அருகே தடையை மீறி உண்ணாவிரதம்; பா.ஜனதாவினர் கைது – பதட்டம் நிலவியதால் போலீசார் குவிப்பு

களியக்காவிளை அருகே உள்ள இடைக்கோடு பஞ்சாயத்து அலுவலகத்தில் இலவு மரத்தை வெட்டி அகற்ற, பத்மனாபுரம் ஆர்.டி.ஓ.அனுமதி வழங்கியிருந்தார் இந்த நிலையில் மரத்தை வெட்டி அகற்ற கூடாது என்று பா.ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் 6-ந் தேதி (இன்று) உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் அறிவித்த னர். ஆனால் போராட்ட த்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் இன்று தடையை மீறி பா.ஜனதா கட்சியினர், பஞ்சாயத்து அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். இதனை தொடர்ந்து போராட்டத்திற்கு முயன்ற 13 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும்அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் தலை மையில் போலீசார் அங்கு குவிக்க பட்டுள்ளனர்.