Home » கன்னியாகுமரி செய்திகள் » கல்லூரி வெள்ளி விழாவில் விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு

கல்லூரி வெள்ளி விழாவில் விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி வெள்ளி விழாவில், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்பரையாற்றி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ், சுயநிதி கலை அறிவியல் கல்லூரி தலைவர் மருத்துவர் அஜித்குமார் லால்மோகன் மற்றும் கல்லூரியின் தாளாளர் பழனிச்சாமி, துணைத்தலைவர் பொன்னுச்சாமி, துணைச்செயலாளர் பட்டாசு மணி, கல்லூரி முதல்வர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.