Templates by BIGtheme NET
Home » இந்தியா செய்திகள் » கர்நாடக சட்டசபைக்கு மே 12-ந் தேதி தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
Karnataka-Assembly-Election-2018

கர்நாடக சட்டசபைக்கு மே 12-ந் தேதி தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது

பெங்களூரு,

கர்நாடக சட்ட சபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஏப்ரல் 17-ந் தேதி (அதாவது இன்று) வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று(செவ்வாய்க்கிழமை) மாநிலம் முழுவதும் தொடங்குகிறது.

இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குவதால், தேர்தல் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அத்துடன் மனு தாக்கல் செய்ய வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.