Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » கருங்கல் அருகே லாரி மோதி மின்கம்பம் உடைந்து விழுந்ததில் பால் வியாபாரி பலி
lorry-hit-electric-pole-break-milk-vendor-died-in-karungal

கருங்கல் அருகே லாரி மோதி மின்கம்பம் உடைந்து விழுந்ததில் பால் வியாபாரி பலி

கருங்கல்:

கருங்கல் அருகே உள்ள மாங்கரை ஆழகாணிவிளை பகுதியை சேர்ந்தவர் பால் ரெத்தினம். (வயது 67). இவர் வீட்டில் மாடு வளர்த்து பால் கறந்து விற்பனை செய்து வந்தார்.

பால்ரெத்தினம் இன்று அதிகாலை வழக்கம்போல் கறந்த பாலை எடுத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கு கொடுத்து விட்டு நடந்து சென்று கொண்டிருந்தார். காலை 5.30 மணி அளவில் அவர் தனது வீடு அருகே சென்று கொண்டிருந்தபோது கருங்கலில் இருந்து புதுக்கடை நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியில் உயரமாக பாரம் இருந்ததால் மேலே சென்ற மின் கம்பியில் சிக்கி மின்கம்பி அறுந்தது. மேலும் ஒரு மின் கம்பமும் உடைந்து விழுந்தது.

அந்த மின்கம்பம் நடந்து வந்து கொண்டிருந்த பால்ரெத்தினம் மீது விழுந்ததால் அவர் அதில் சிக்கி படுகாயம் அடைந்தார். விபத்து நடந்ததும் அந்த லாரி நிற்காமல் வேகமாக சென்று விட்டது. இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். உடனடியாக பால்ரெத்தினத்தை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி கருங்கல் போலீ சில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பால்ரெத்தினத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற டிரைவரையும், லாரியையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த விபத்து பற்றி மின்வாரிய அலுவலகத்திலும் புகார் செய்யப்பட்டது. அங்கிருந்து ஊழியர்கள் விரைந்து வந்து உடைந்த மின்கம்பத்தையும் அறுந்து கிடந்த மின் கம்பிகளையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.