பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » உலகச்செய்திகள் » கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் தாக்குதல் : 2 பொதுமக்கள் பலி ;4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
img 14

கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் தாக்குதல் : 2 பொதுமக்கள் பலி ;4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தான் கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் இன்று காலை நான்கு பேர் தங்கள் வாகனத்திலிருந்து வெளியே வந்து கையெறி குண்டுகளை வீசி உள்ளனர். இந்த குண்டுகள் வெடித்து இரண்டு பேர் பலியானார்கள். அதே நேரத்தில் பலர் காயம் அடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கும் வந்த பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்திய 4 பயங்கர்வாதிகளையும் சுட்டு கொன்றனர். தாக்குதல் நடத்தியவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

சிந்து முதலமைச்சர் முராத் அலி ஷா, இந்த தாக்குதல் “தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் மீதான தாக்குதலுக்கு ஒத்ததாகும்” என்று கூறி உள்ளார்.

சிந்து ஆளுநர் இம்ரான் இஸ்மாயில் கண்டித்து, “நாங்கள் சிந்தை எந்த விலை கொடுத்தாவது பாதுகாப்போம்” என்று கூறினார்.