Home » குமரி செய்திகள் » கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களில் எஸ்.பி. ஆய்வு
06

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களில் எஸ்.பி. ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களில் எஸ்.பி. அதிரடி ஆய்வு செய்தார். கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி பத்ரி நாராயணன் மாவட்டத்தில் உள்ள அருமனை, கடையாலுமூடு, ஆறுகாணி ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் ஆய்வு செய்து ஆவணங்களை தணிக்கை செய்தார்.

இயற்கையை பேணும் விதமாக மரக்கன்றுகளை அருமணை போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நட்டார். கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போலீசார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தக்கலை சப் டிவிஷன் டிஎஸ்பி ராமச்சந்திரன், அருமனை இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது கலந்து கொண்டனர்.