Home » இந்தியா செய்திகள் » கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பஸ்கள் ஓடாது – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
fullsizeoutput_1fd4

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பஸ்கள் ஓடாது – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு

நாடு முழுவதும் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தாலும் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் நாளை (திங்கட்கிழமை) முதல் ஐம்பது சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குமரி மாவட்ட ஆட்சி தலைவர் திரு. பிரசாந்த் வதேரெ மாவட்டத்தில் நாளை பேருந்துகள் இயக்கப்படாது என அறிவித்துள்ளார். வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களால் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் நாளை (திங்கட்கிழமை) மாலை அரசு பேருந்து போக்குவரத்துக்கு என்று முதல் செயல்பட தொடங்கும் என்ற அறிவிப்பை மாவட்ட ஆட்சி தலைவர் வெளியிடுவார் என கூறப்படுகிறது.