Home » குமரி செய்திகள் » கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு குறித்து தொலைபேசி வழி கலந்துரையாடல்
image 1

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு குறித்து தொலைபேசி வழி கலந்துரையாடல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுடன் தொலைபேசி வழி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரிடர் காலங்களில் விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர்; குறிப்பாக அதிக மழை, பலத்த காற்று, பயிர்களில் நோய் தாக்குதல் போன்ற காரணங்களால் பயிர்கள் சேதம் அடைந்து வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை சரிகட்டும் விதமாக அரசாங்கம் பயிர் காப்பீடு என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதுகுறித்து விவசாயிகளிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலைத்துறை மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை இணைந்து தொலைபேசி வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாழை மற்றும் மரவள்ளி கிழங்கு பயிரிடும் விவசாயிகள் கலந்து கொண்டனர். தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மாலதி, உதிவி இயக்குனர்கள் ஆறுமுகம், சரண்யா, விமலா மற்றும் காப்பீடு நிறுவனத்தின் பிரதிநிதி செல்வம் ஆகியோர் விவசாயிகளுடன் கலந்துரையாடினர். இதில் வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு காப்பீடு செய்வதின் முக்கியத்துவம், பிரீமியம் தொகை, காப்பீடு செய்வதற்கான ஆவணங்கள் மற்றும் அதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. விவசாயிகள் தங்களுக்கான சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றுக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மேலாளர் ஆண்டனி எட்வர்ட் சிங் மற்றும் முன்னோடி விவசாயிகள் செய்திருந்தனர்.