Home » குமரி செய்திகள் » கன்னியாகுமரி – நிசா முதீன் இடையே சிறப்பு ரெயில்
02

கன்னியாகுமரி – நிசா முதீன் இடையே சிறப்பு ரெயில்

கன்னியாகுமரி – ஹஸ்ரத் நிசாமுதீன் இடையே 25 – ந் தேதி முதல், வாரம் இரு முறை சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- கன்னியாகுமரியில் இருந்து, புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாரம் இரு முறை இயக்கப்படும் சிறப்பு ரெயில் சேவை 25-ந் தேதி தொடங்குகிறது. கன்னியாகுமரியில் இருந்து இரவு 7.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் ( எண். 06011) வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.35 மணிக்கு ஹஸ்ரத் நிசாமுதீன் சென்றடையும்.

மறு மார்க்கமாக, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் ஹஸ்ரத் நிசாமுதீன் – கன்னியாகுமரி சிறப்பு ரெயில் (எண்.06012) திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மாலை 4.45 மணிக்கு கன்னியாகுமரி வந்து சேரும். இந்த ரெயிலுக்கான சேவை 28-ந் தேதி தொடங்குகி றது. முற்றிலும் முன்பதிவு அடிப்படையிலேயே பயணிகள் பயணம் செய்ய முடியும். இந்த ரெயில்கள், நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி , விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் , சென்னை எழும்பூர், விஜயவாடா உட்பட முக்கிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அந்த .அறிக்கையில் கூறப்பட்டுள்ளது