Home » கன்னியாகுமரி செய்திகள் » கன்னியாகுமரியில் இருந்து காதலியை மதுரைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் நண்பர்களுடன் சேர்ந்து கூலித்தொழிலாளி வெறிச்செயல்

கன்னியாகுமரியில் இருந்து காதலியை மதுரைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் நண்பர்களுடன் சேர்ந்து கூலித்தொழிலாளி வெறிச்செயல்

 கன்னியாகுமரியில் இருந்து காதலியை மதுரைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் நண்பர்களுடன் சேர்ந்து கூலித்தொழிலாளி வெறிச்செயல்

கன்னியாகுமரியில் இருந்து காதலியை மதுரைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம்
நண்பர்களுடன் சேர்ந்து கூலித்தொழிலாளி வெறிச்செயல்

மதுரை, ஜன.7-

கன்னியாகுமரியில் இருந்து காதலியை மதுரைக்கு அழைத்து சென்று நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளியையும், அவருடைய நண்பர்கள் 6 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

செல்போன் மூலம் பழக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருடைய மகள் ரம்யா (வயது 25 பெயர் மாற்றபட்டுள்ளது). இவர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் படித்து முடித்துள்ளார்.

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் அகத்தீஸ்வரத்தில் கூலி வேலை செய்து வந்தார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர். பின்னர் நாள் தோறும் செல்போன் மூலம் பேசி வந்தனர். இந்தநிலையில் மதுரைக்கு வருமாறு ரம்யாவை பிரகாஷ் அழைத்தார். அவரது வற்புறுத்தலால் கன்னியாகுமரியில் இருந்து ரெயில் மூலம் மதுரை வந்த ரம்யாவை ரெயில் நிலையத்திற்கு சென்று பிரகாஷ் வரவேற்று அழைத்து வந்தார்.

பின்னர் அவனியாபுரத்தில் உள்ள எம்.சி. காலனிக்கு கூட்டி சென்றார். அங்கு ஒரு இருட்டான பகுதியில் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

பலாத்காரம்

அப்போது ரம்யா தன்னை சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். விரைவில் திருமணம் செய்து கொள்வதாக பிரகாஷ் உறுதி அளித்ததால் இருவரும் உல்லாசமாக இருந்தனராம்.

சிறிதுநேரம் கழித்து பிரகாஷ் செல்போன் மூலம் நண்பர்களிடம் பேசினார். இதையடுத்து அவருடைய நண்பர்கள் வீரமணி உள்பட 3 பேர் முதலிலும், தொடர்ந்து கார்த்திக் உள்பட 3 பேர் 2-வதாகவும் அங்கு வந்து சேர்ந்தனர்.

இதையடுத்து தன் நண்பர்களுடனும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று ரம்யாவை பிரகாஷ் வற்புறுத்தினார். இதற்கு மறுத்த அவரை தாக்கி, மிரட்டினர். பிறகு, பிரகாசும் அவருடைய நண்பர்கள் 6 பேரும் சேர்ந்து ரம்யாவை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

தப்பி ஓட்டம்

இதனால் மயக்கமடைந்த ரம்யாவை விட்டுவிட்டு பிரகாஷ் உள்பட 7 பேரும் தப்பிச் சென்று விட்டனர். சிறிதுநேரத்தில் அந்தவழியாக சென்றவர்கள் ரம்யாவை மீட்டு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ், வீரமணி, கார்த்திக் உள்பட 7 பேரை தேடி வருகின்றனர்.