Templates by BIGtheme NET
heavy-rain-hits--Flood-Warning-aletered

கனமழை எதிரொலி: தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

புதுடெல்லி,

கர்நாடக மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழையால் அம்மாநில அணைகள் விரைவாக நிரம்பி வருவதால் கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி என கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 1.25 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் தற்போதைய நீர்திறப்பு 25,000 கன அடியில் இருந்து 30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேரளாவில் தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு பெய்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் அணைகள் உள்பட நீர் நிலைகள் நிரம்பி விட்டன. மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால், முல்லைப்பெரியார் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இரண்டு மாநிலங்களிலும் பெய்து வரும் கனமழையை அடுத்து தமிழகத்தில் காவிரி கரையோரமுள்ள 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்குமாறு அம்மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துமாறு ஆணையம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.