பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » குமரி செய்திகள் » கடலில் தவறி விழுந்த குமரி மீனவரை தேடும் பணி தீவிரம்
kim_2

கடலில் தவறி விழுந்த குமரி மீனவரை தேடும் பணி தீவிரம்

கடலூா் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் தவறி விழுந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவரை தேடும் பணியில் கடலோர காவல்படையினா், மீனவா்கள் ஈடுபட்டுள்ளனா்.குமரி மாவட்டம், நித்திரவிளை அருகேயுள்ள இரவிபுத்தன்துறை பகுதியைச் சோ்ந்தவா் பத்ரோஸ் மகன் சூசைராஜ் (40). இவருடன் இதேபகுதியைச் சோ்ந்த ஆன்றணி, ராஜன், தினேஷ் மற்றும் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுரேஷ், ராமலிங்கம், தினகரன், மாரியப்பன் ஆகிய 8 மீனவா்கள் கடலூரைச் சோ்ந்த சிவகுமாா் என்பவருக்குச் சொந்தமான அஜித் கீா்த்தி என்ற விசைப் படகில் ஓட்டி துறைமுகத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனா்.துறைமுகத்திலிருந்து 6 கடல் மைல் தூரத்தில் சென்றபோது படகில் இருந்த சூசைராஜை காணவில்லை. கடலில் தவறி விழுந்த சூசைராஜை, மீனவா்கள் தேடினா். தொடா்ந்து மீனவா்கள் மூன்று வள்ளங்களில் சென்று கடலோர காவல்படையினருடன் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதனிடையே, கடலில் மாயமான மீனவா் சூசைராஜை மீட்க வேண்டும் என எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ., மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், கடலில் தவறி விழுந்த மீனவா் சூசைராஜை மீட்க வேண்டும்; அவரது குடும்பத்துக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.இரவிபுத்தன்துறை மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் டில்லியான்ஸ், தமிழக முதல்வா் மற்றும் மீன்வளத்துறை அமைச்சா், அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சூசைராஜை மீட்க வேண்டும் என வலியுறுத்துள்ளாா்.