Templates by BIGtheme NET
Home » வர்த்தகம் செய்திகள் » கடனில் தவித்து வரும் ஐஎல் & எஃப்எஸின் நிர்வாக இயக்குநர் இனி இவர்தான்..?
ilfs-business-news

கடனில் தவித்து வரும் ஐஎல் & எஃப்எஸின் நிர்வாக இயக்குநர் இனி இவர்தான்..?

தற்போது நிலுவையிலுள்ள கடன்கள் ரூ. 99,354 கோடியாக உள்ளது

Mumbai:

ஐஎல்&எஃப்எஸ் நிறுவனத்தின் நான் – எக்ஸ்க்யூட்டிவ் டைரக்டராக 6 மாதம் பணிபுரிந்த சந்திர சேகர் ராஜனை நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுவதாக உதய் கோட்டாக் தெரிவித்துள்ளார். உதய் கோடாக் ஐஎல்&எஃப் எஸின் நான் – எக்ஸ்க்யூட்டிவ் சேர்மனாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வினித் நாயர் நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவர் மற்றும் நிர்வாக் இயக்குனராகவும் இருந்து வருகிறா. இனி வரும் காலத்தில் துணை நிர்வாக இயக்குனராக மட்டுமே இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎல்&எஃப்எஸ் குழு கூட்டத்திற்குப் பின் இந்த தகவலை உதய் கோடாக் ஊடகத்தினரிடம் தெரிவித்தார். தான் நான் -எக்ஸ்க்யூடிவ் தலைவராக தொடர்ந்து இருக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

ஐஎல்&எஃப் எஸ் தனது கடன்களை அடைக்க சொத்துக்களை விற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் தற்போது நிலுவையிலுள்ள கடன்கள் ரூ. 99,354 கோடியாக உள்ளது என்று தலைமை நிர்வாக அதிகாரி என். சிவராமன் கூறினார்.