பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » குமரி செய்திகள் » கஞ்சா விற்பனை 3 வாலிபர்கள் கைது
03

கஞ்சா விற்பனை 3 வாலிபர்கள் கைது

நாகர்கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்த மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்து 1.100 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் பைக்கும் பறிமுதல் செய்தனர். இது பற்றி போலீசார் தெரிவித்ததாவது:

இடலாக்குடி கன்னன்குளம் பெட்ரோல் பங்க் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கோட்டார் போலீசாருக்கு தகவல் வந்ததைத் தொடர்ந்து போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் சம்பவ இடம் சென்று அங்கு கஞ்சா விற்பனை செய்து வந்த இருளப்பபுரத்தைச் சேர்ந்த பரசுராமன்(18), இடலாக்குடி கன்னங்குளத்தைச் சேர்ந்த சார்லட்மில்டன்(18) மற்றும் வடிவீஸ்வரம் சுப்பையா காலனியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி(23) ஆகியோரை கைது செய்து அவர்கள் வைத்திருந்த 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் பைக்கையும் பறிமுதல் செய்து ஸ்டேசன் கொண்டு வந்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்..