Home » கன்னியாகுமரி செய்திகள் » கச்சிராயப்பாளையம் அருகே காரில் சாராயம் கடத்தியவர் கைது

கச்சிராயப்பாளையம் அருகே காரில் சாராயம் கடத்தியவர் கைது

கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்வராயன்மலை மாயம்பாடி பகுதியில் உள்ள குள்ள கருப்பன் கோவிலில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மாயம்பாடி பகுதியை சேர்ந்த ராமச்சந்திரகன் மகன் வேல்முருகன்(வயது 32) என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயம்பாடி பகுதியில் இருந்து கச்சிராயப்பாளையம் பகுதிக்கு காரில் சாராயம் கடத்தி சென்ற வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து வேல்முருகனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த காரை பறிமுதல் செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.