Home » தமிழகச் செய்திகள் » ஓயாது உழைப்போம்! மக்களின் நற்சான்றிதழைப் பெற்றிடுவோம்! – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

ஓயாது உழைப்போம்! மக்களின் நற்சான்றிதழைப் பெற்றிடுவோம்! – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


Notice: Undefined index: tie_hide_meta in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/includes/post-meta.php on line 3

மக்களைத் தேடிச் சென்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, தீர்த்திடுவோம் என்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “விமர்சனங்களை புறந்தள்ளி மக்கள் பணியை தொடர வேண்டும். மக்களை தேடி பயணிப்போம். மக்களின் குறைகளை தீர்ப்போம். ஓய்வின்றி தமிழ்நாட்டின் வளர்சிக்கு பாடுபடுவோம். அக்கப்போர் விமர்சனைங்களை புறந்தள்ளி, ஆக்கபூர்வமான மக்கள் பணியை தொடர்ந்திட வேண்டியது நமது கடமை. நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் என்னை சர்வாதியாக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடந்தான் ‘சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன்’ என்று தெரிவித்தேன். மக்களைத் தேடிச் சென்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, தீர்த்திடுவோம்! ஓயாது உழைப்போம்! நல்ல பெயர் எடுத்து, மக்களின் நற்சான்றிதழைப் பெற்றிடுவோம்!” என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Notice: Undefined index: tie_hide_share in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/single.php on line 65