Home » உலகச்செய்திகள் » ஒரே வீட்டில் கூடி பேசிய 10 இந்தியர்கள் மீது வழக்குப்பதிவு – சிங்கப்பூர் அரசு அதிரடி
image 21

ஒரே வீட்டில் கூடி பேசிய 10 இந்தியர்கள் மீது வழக்குப்பதிவு – சிங்கப்பூர் அரசு அதிரடி

சிங்கப்பூரில் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகள் அமலில் உள்ளன. மற்ற வீடுகளுக்கு சென்று சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோருக்கு 6 மாதம்வரை ஜெயில் தண்டனை, 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபராதம் ஆகியவை விதிக்கப்படும்.

இந்நிலையில், சிங்கப்பூரில் ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒரு பெண், 2 ஆண்கள் கொண்ட இந்திய குடும்பத்தினர், தங்கள் வீட்டுக்கு ஒரு பெண், 6 ஆண்கள் என 7 இந்தியர்களை வரவழைத்தனர். அவர்களுடன் சேர்ந்து பேசி தேநீர் குடிப்பதும், படிப்பதுமாக இருந்தனர்.

இதை கண்டறிந்து 10 பேர் மீதும் சிங்கப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் சிலர் மாணவர்கள் ஆவர். தாங்கள் புதியவர்கள் என்பதால், விதிமுறைகள் தெரியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.