Home » குமரி செய்திகள் » ஒரே நாளில் 4 கடைகளில் திருட்டு மார்த்தாண்டத்தில் வியாபாரிகள் கலக்கம்
03

ஒரே நாளில் 4 கடைகளில் திருட்டு மார்த்தாண்டத்தில் வியாபாரிகள் கலக்கம்

மார்த்தாண்டத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து நான்கு கடைகளில் திருட்டு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி பகுதியில் குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான ஷாப்பிங் காம்பிளக்ஸ் உள்ளது. இதில் மார்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியை சேர்ந்த சலீம் என்பவர் ஓட்டல் மற்றும் இறைச்சி கடை நடத்தி வருகிறார்.

அருகில் உள்ள கடையில் ராஜூவ் என்பவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். அருகில் உள்ள கடையை சரிதா என்பவர் பிசியோதெரபி சென்டர் நடத்தி வருகிறார். இந்நிலையில், இந்த கடைகளை இவர்கள் வழக்கம் போல அடைத்து விட்டு சென்றனர். காலையில் பார்த்த போது இந்த மூன்று கடைகளின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இரவு பூட்டுகளை உடைத்த மர்ம நபர்கள் உள்ளே சென்று பணத்தை தேடி உள்ளனர். சிறு தொகைகள் மட்டுமே இருந்ததால் அவற்றை திருடிவிட்டு மர்ம நபர்கள் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.