Templates by BIGtheme NET
Home » வர்த்தகம் செய்திகள் » ஒரு வாரத்தில் 3.74 பில்லியன் டாலரை இழந்தார் வாரன் பபெட்..!
warrenbuffett

ஒரு வாரத்தில் 3.74 பில்லியன் டாலரை இழந்தார் வாரன் பபெட்..!

அமெரிக்காவின் மத்திய வங்கியாகத் திகழும் பெடரல் ரிசர்வ் பணவீக்கம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தனது வட்டி விகிதத்தை மாற்றுவதில் தொடர்ந்து மாறுபட்ட கருத்துகளை முன்வைக்கிறது. இதன் காரணமாகக் கடந்த ஒரு வாரமாகவே அமெரிக்கப் பங்குச்சந்தை மந்தமான வர்த்தகம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக அமெரிக்காவின் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் ஒருவரான வாரன் பபெட் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 3.74 பில்லியன் டாலர் அளவிலான சொத்தை இழந்துள்ளார். இதைத் தொடர்ந்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் 3.71 பில்லியன் டாலர், ஆல்பபெட் நிறுவனத்தின் தலைவர் லேரி பேஜ் 3.1 பில்லியன் டாலரும், அதேபோல் செர்ஜி பிரின் 3 பில்லியன் டாலரும் இழந்துள்ளனர். மேலும் உலகின் 500 முன்னணி பணக்காரர்கள் கடந்த ஒரு வாரத்தில் 128 பில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர்.