Templates by BIGtheme NET
sugarcane

ஒரு கட்டு ரூ.350க்கு விற்பனை பண்ருட்டி செங்கரும்பு விற்பனை அமோகம்

வேலூர் : பண்ருட்டியில் இருந்து வேலூரில் விற்பனைக்காக செங்கரும்பு குவிந்துள்ளது. கடந்த ஆண்டை போலவே இப்போதும் வேலூர் மார்க்கெட்டில் பண்ருட்டி செங்கரும்பு ஒரு கட்டு ரூ.350 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் என்று வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல் பண்டிகை காலங்களில் அந்தந்த பண்டிகை சீசனுக்கு ஏற்ற பொருட்கள் வெளியூர்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். இந்த நிலையில் செங்கரும்பு சீசன் தற்போது களைகட்டியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பயிரிடப்படும் கரும்பு வெல்லம் மற்றும் சர்க்கரை உற்பத்திக்கு செல்வதாலும், கடினத்தன்மை உடையதாலும் அந்த கரும்பு வெளியில் விற்பனைக்கு வருவதில்லை. இதனால் வேலூர் மாவட்டத்தின் செங்கரும்பு தேவையை விழுப்புரம், சேலம், பெரம்பலூர் மாவட்டங்கள் பூர்த்தி செய்கின்றன.

அதன்படி வேலூருக்கு தற்போது செங்கரும்பு வரத்து தொடங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு 5 லோடுகள் வரை செங்கரும்பு வேலூர் மாவட்டத்துக்காக வரவழைக்கப்படுகிறது. அடுத்தமாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இப்போதே செங்கரும்புகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
இதனையொட்டி வேலூர் மார்க்கெட்டிற்கு பண்ருட்டியில் இருந்து செங்கரும்பு லோடு நேற்று முன்தினம் வந்தது. 10 கரும்புகள் அடங்கிய ஒரு கட்டு ரூ.350 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாவட்டம் முழுவதிலும் இருந்து வியாபாரிகள் கரும்பு கட்டுகளை வாங்கி செல்ல தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.