Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » ஒருங்கிணைந்த பயிர் ஊட்ட நிர்வாக முறைப்படி சாகுபடி செலவை குறைத்து வருமானத்தை அதிகரிக்கலாம்
Crops-cultivation-in-kanyakumari

ஒருங்கிணைந்த பயிர் ஊட்ட நிர்வாக முறைப்படி சாகுபடி செலவை குறைத்து வருமானத்தை அதிகரிக்கலாம்

நாகர்கோவில், ஏப். 21: ஒருங்கிணைந்த பயிர் ஊட்ட நிர்வாகத்தை பயன்படுத்தி சாகுபடியில் செலவை குறைத்து வருமானத்தை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜாக்கமங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை: மண் வளத்தையும், நிலத்தின் உற்பத்தி திறனையும் தொடர்ந்து நீண்ட காலம் தக்க வைக்க இயற்பியல் உழவியல், ரசாயனம் மற்றும் உயிரியல் தொடர்பான தொழில் நுட்பங்களை மனித முயற்சியால் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதே ஒருங்கிணைந்த பயிர் ஊட்ட நிர்வாகம் ஆகும். அதன்படி, இயற்பியல் தொழில்நுட்பங்கள் மூலம் மண் கடினத்தன்மை, மணல் சாரியான மண், அதிக களியான மண் போன்றவற்றை சீர் செய்ய வேண்டும். உழவியர் தொழில்நுட்பங்கள் மூலம் பொருத்தமான பயிர் ரகங்களை தேர்ந்தெடுப்பது, நிலத்தை ஆழமாக உழுது பண்படுத்துவதும், வரிசையான நடவின் மூலம் பயிர் எண்ணிக்கையை பராமரிப்பது உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும்.வேதியல் தொழில்நுட்பங்களின் மூலம், தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரங்களை பிரித்து இடுவது, தழைச்சத்து விரையமாவதை தடுக்க அனுடன் வேப்பம் புண்ணாக்கினை கலந்து இடுவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும். உயிரியியல் தொழில்நுட்பங்கள் மூலம் தொழு உரம் மற்றும் பசுந்தாழ் உரங்களை அதிகளவில் பயன்படுத்துவது, பாஸ்போ பேக்டீரியம் மற்றும் விஏஎம் என்ற வகை பூஞ்சாணம் போன்ற மணிச்சத்தை கரைக்ககூடிய நுண்ணுயிர்களை பயன்படுத்துவது. இவ்வாறு உயிரியல் சார்ந்த தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் விளைபொருளின் தரம் அதிகரிப்பதோடு சாகுபடி செலவும் குறைகிறது. சுற்றுப்புற சூழலும் பாதுகாக்கப்படுகிறது. இந்த நான்கு வகை தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து பின்பற்றுவதன் மூலும் நீடித்த மண்வளம் பெறுவதுடன் சாகுபடி செலவு பெருமளவு குறைந்து விவசாயிகள் அதிக வருமானம் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.