Home » வர்த்தகம் செய்திகள் » ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ்-ன் 4.2% பங்குகள் விற்பனை.. திடீர் விற்பனை எதற்காக
image 2

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ்-ன் 4.2% பங்குகள் விற்பனை.. திடீர் விற்பனை எதற்காக

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி இன்று வெளியிட்டுள்ள காலாண்டு அறிக்கையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 36 சதவீதம் அதிக லாபத்தைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 1,908 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்திருந்த நிலையில், தற்போது 2,599 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்தது.

ஆனாலும் இன்றைய வர்த்தகத்தில் 6 சதவீதம் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி வைத்திருக்கும் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனப் பங்கு இருப்பில் 4.2 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.