Templates by BIGtheme NET
kumariexpress_news

ஏற்றுமதி செய்வதற்கான ஊக்க தொகை குறைப்பால் ஜவுளித்துறைக்கு இழப்பு: ஏற்றுமதியாளர்கள் கவலை

கரூர் : ஏற்றுமதி ஊக்க தொகையை மத்திய அரசு குறைத்திருப்பதால் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். ஜவுளி ஏற்றுமதி ஊக்கத் தொகையாக, ஏற்றுமதியாகும் ஜவுளிமதிப்பில் 7 சதவீதம் முதல் 9 சதவீதம் வழங்கப்பட்டு வந்தது. இது தற்போது 2சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பு ஜவுளி துறையினருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர் ஸ்டீபன்பாபு கூறியதாவது: மத்திய நிதிஅமைச்சகம் அனைத்து ஜவுளி ஏற்றுமதியாளருக்கும் ஏற்றுமதி ஊக்கத் தொகை வழங்கிவந்தது. டூட்டி டிரா பேக் எனப்படும் இந்த தொகை இதுவரை 7முதல் 9சதவீதம் வரை ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதனை இப்போது ஒரேயடியாக 2 சதவீதமாக குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்றுமதி செய்வோருக்குபெரும் பின்னடைவையும் இழப்பையும் ஏற்படுத்துவதாகும். ஏற்கனவே ஐரோப்பியநாடுகள், அமெரிக்கா, கனடா, ஜப்பான்,, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து ஆர்டர்களை பெற்றுவந்து அதனை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் இந்த அறிவிப்பு வெளிவந்திருப்பதால் பெரும் இழப்பை சந்திக்க வேண்டியதிருக்கிறது.

ரூ.1கோடிக்கு ஜவுளி ஏற்றுமதி செய்பவருக்கு முன்பு 7சதவீதம் என்றால் ரூ.7 லட்சம் ஏற்றுமதி ஊக்கத் தொகை கிடைத்தது. இனி ரூ.2 லட்சம் தான் கிடைக்கும். வருடத்திற்கு ரூ.20 கோடிக்கு ஏற்றுமதி வர்த்தகம் செய்தால் ரூ.ஒருகோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்றார். ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே ஜவுளிதொழில் உள்ளது. சாயப்பூங்கா அமைக்கப்படவில்லை. இதனால் நூலுக்குசாயமிடுவதற்கு கூடுதல் செலவுபிடிக்கிறது. திடீரென நூல் விலை உயர்கிறது. 6 மாதத்திற்காகவது நூல்விலையை நிலையாக வைத்திருக்கவேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஏற்றுமதி ஜவுளிக்கு ஏற்கனவே விலை நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. ஊக்கத்தொகையும் குறையும்போது நஷ்டம்தான்வரும். ஜிஎஸ்டி வரி காரணமாக ஜவுளிஉற்பத்தியில் பெரும் சிக்கல் உள்ளது. ஜிஎஸ்டி வரியை ஒவ்வொரு நிலையிலும் செலுத்தவேண்டியதிருக்கிறது. இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் ஏற்றுமதிதொழிலை செய்துவருகிறோம். இப்போது ஏற்றுமதிக்கான ஊக்கதொகையை 2சதவீதமாக அடியோடு குறைத்து அறிவித்தால் ஏற்றுமதியாளர்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடுகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*