Home » வர்த்தகம் செய்திகள் » ஏர் இந்தியாவை விற்க புதிய திட்டம்
air india

ஏர் இந்தியாவை விற்க புதிய திட்டம்

ஏர் இந்தியா பங்குகளை விற்க புதிய திட்டத்தை வகுக்க திட்டமிட்டுள்ளதாக நிதி அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதில் அரசு தீவிரம் காட்டிவரும் நிலையில், நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா பங்குகளை விற்க புதியதாக ஒரு திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஏர் இந்தியாவின் 76 சதவீத பங்குகளை விற்கும் முயற்சி தோல்வி அடைந்தது. எந்த நிறுவனங்களும் பங்குகளை வாங்க முன்வரவில்லை. அதற்கு காரணமாக, மீதமுள்ள 24 சதவீத பங்குகள், நிறுவனத்தின் மிதான உரிமைகள், அதிகமான கடன் போன்றவை முன்வைக்கப்பட்டன.

ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பதற்காக அமைக்கப்பட்ட குழு ஏர் இந்தியா பங்குகளை விற்பதற்கான புதிய திட்டத்தை வகுத்துவருகிறது. இந்தப் புதிய திட்டத்தில் 100 சதவீத பங்குகளையும் விற்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.