Home » சினிமா செய்திகள் » எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க..லீக் ஆன ரஜினி ஆடியோ…
cinema

எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க..லீக் ஆன ரஜினி ஆடியோ…

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், இப்படம் அவருக்கு 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார். எந்தவித எதிர்பார்ப்புமின்றி வெளியான இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்றது.

மேலும் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பெரிய அளவில் வெற்றியடைந்தது. இப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனனும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்நிலையில் இப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். அதுமட்டுமின்றி இப்படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியிடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டி தள்ளியுள்ளார்.

இதனை உறுதி படுத்தும் வகையில் இயக்குனர் தேசிங்கும் தனது ட்விட்டரில் இது குறித்து பதிவிட்டு இருந்தார்.

தற்போது நடிகர் ரஜினி அவரிடம் பேசிய ஆடியோ பதிவும் வெளியாகியுள்ளது.