Templates by BIGtheme NET
Home » இந்தியா செய்திகள் » எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
Opposition-parties-lose--Both-Houses-of-Parliament-are

எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி,

நாடாளுமன்ற கூட்டம் நேற்று தொடங்கியதுமே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வங்கி மோசடி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கூச்சல் போட்டனர். அ.தி.மு.க. எம்.பி.க்களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி குரல் கொடுத்தனர். எதிர்க்கட்சியினர் அவையின் மைய பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முதலில் ஒரு மணி நேரம் அவையை ஒத்திவைத்தார்.

பின்னர் தொடர்ந்து அவை கூடியதும் இதே நிலைமை நீடித்தது. இதனால் முக்கிய நிதி மசோதா, நிதி ஒதுக்கீடு மசோதா போன்றவை எடுத்துக்கொள்ளப்படவில்லை. பல்வேறு குழுக்களின் அறிக்கைகளை மட்டும் தாக்கல் செய்துவிட்டு அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

நாடாளுமன்ற மேலவையிலும் மதிய உணவுக்கு பின்னர் இதே நிலை தான் எதிரொலித்தது. இதனால் மேல்-சபையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அறிவித்தார்.