சற்று முன்
Home » இந்தியா செய்திகள் » ஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் – மத்திய மந்திரி வழங்கினார்
For-better-implementation-of-the-nutrition-plan-Awards-for

ஊட்டச்சத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் – மத்திய மந்திரி வழங்கினார்

புதுடெல்லி,

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நிலையை ஏற்படுத்த ‘போஷன் அபியான்’ என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பொது மென்பொருள் செயல்பாடு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு எதிராக சமுதாய அணியை திரட்டல் போன்றவற்றில் ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டு இருந்தது. ‘போஷன் அபியான் திட்டம்’ தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.

இந்தநிலையில், 2018-2019-ம் ஆண்டில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் தமிழகம் பல்வேறு விருதுகளுக்கு தேர்வு பெற்றது.

இதைத்தொடர்ந்து டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி விருதுகளை வழங்கினார். அந்த விருதுகளை தமிழக அரசு சார்பில் சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, சமூக நலத்துறை செயலாளர் மதுமதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட இயக்குனர் கவிதா ராமு, நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்த விருதுகளுடன் ரூ.3 கோடியே 80 லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.