Home » விளையாட்டுச்செய்திகள் » உலக ஜூனியர் தடகளத்தில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்…!

உலக ஜூனியர் தடகளத்தில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்…!

உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் (20 வயதுக்குட்பட்டோர்) போட்டி கொலம்பியாவின் கலி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பரத் ஸ்ரீதர், பிரியா மோகன், கபில், ருபால் சவுத்ரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 17.76 வினாடிகளில் இலக்கை கடந்து தங்களது முந்தைய ஆசிய சாதனையை தகர்த்து, வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. இதில் பரத் ஸ்ரீதர் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். 3 நிமிடம் 17.69 வினாடிகளில் இலக்கை எட்டிய அமெரிக்கா தங்கப்பதக்கம் பெற்றது.