Home » குமரி செய்திகள் » உலக சுற்றுலாதினம் பக்தர்களுக்கு முககவசம் வழங்கிய சுற்றுலா துறை
01

உலக சுற்றுலாதினம் பக்தர்களுக்கு முககவசம் வழங்கிய சுற்றுலா துறை

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சுற்றுலா தினம் சுற்றுலாவும் கிராம அபிவிருத்தியும் என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி யில் மாவட்ட சுற்றுலா துறை சார்பில் கொண்டாடப்பட்டது. வழக்கமாக பூம்புகார் படகு துறைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டு சங்குமாலை அணிவித்து இனிப்பு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்றுகாரணமாக இந்த ஆண்டு பூம்புகார் படகு துறையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபடாததால் பகவதி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முககவசம் வழங்க சுற்றுலா துறை முடிவு செய்தது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு கைகளில் கிருமிநாசினி தெளித்து முககவசம் வழங்கப்பட்டது. பின்னர் சுற்றுலா கையேடு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அதிகாரி நெல்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.