சற்று முன்
Home » விளையாட்டுச்செய்திகள் » உலக கோப்பை கூடைப்பந்து: அர்ஜென்டினா அணி அரைஇறுதிக்கு தகுதி
World-Cup-Basketball-Argentina-qualify-for-the-semifinals

உலக கோப்பை கூடைப்பந்து: அர்ஜென்டினா அணி அரைஇறுதிக்கு தகுதி

ஷாங்காய்,

18-வது உலக கோப்பை கூடைப்பந்து போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா அணி, செர்பியாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 97-87 என்ற புள்ளி கணக்கில் செர்பியாவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 90-78 என்ற புள்ளி கணக்கில் போலந்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.