Templates by BIGtheme NET
Home » இந்தியா செய்திகள் » உலகிலேயே சிறந்த பாரம்பரிய சின்னங்களில் 2-வது இடத்தை பிடித்தது தாஜ்மகால்
Taj-Mahal-is-ranked-2nd-in-the-worlds-best-classical

உலகிலேயே சிறந்த பாரம்பரிய சின்னங்களில் 2-வது இடத்தை பிடித்தது தாஜ்மகால்

புதுடெல்லி,

மன்னர் ஷாஜகான், மறைந்த தனது மனைவி மும்தாஜின் நினைவாக தாஜ்மகாலை கட்டினார். இந்தியாவின் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இந்த காதல் சின்னம் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான இதனை பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்து உள்ளது.

இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், தாஜ்மகாலை நேரில் பார்த்து அதன் அழகை ரசிக்க மறப்பதில்லை. இவ்வாறு ஆண்டுக்கு 80 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தாஜ்மகாலை காண வருகிறார்கள்.

இந்தநிலையில் ‘டிரிப் அட்வைசர்’ என்ற ஆன்லைன் சுற்றுலா நிறுவனம், உலகிலேயே சிறந்த பாரம்பரிய சின்னங்கள் சம்பந்தமாக கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் பல்வேறு நாடுகளின் பாரம்பரிய சின்னங்கள் இடம்பெற்று இருந்தன.

கருத்துக்கணிப்பின் முடிவில் 2-வது இடத்தை தாஜ்மகால் பிடித்து உள்ளது. முதலிடத்தை கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் என்ற கோவில் பெற்றுள்ளது.