Home » வர்த்தகம் செய்திகள் » உலகப் பொருளாதாரம் எப்போது மீண்டு வரும்..? மக்களின் உண்மையான நிலை என்ன..?!
varthagam2

உலகப் பொருளாதாரம் எப்போது மீண்டு வரும்..? மக்களின் உண்மையான நிலை என்ன..?!

கொரோனா வைரஸ்-ன் தாக்கம் அமெரிக்கா, ரஷ்யா முதல் இந்தியா, பிரேசில் வரையில் அனைத்து உலக நாடுகளையும் வரலாறு காணாத ஒரு நிதிநெருக்கடியில் சிக்கவைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் மக்கள் எவ்விதமான செலவு செய்யாமல் இருந்தால் மோசமான நிதிநிலையை எதிர்கொள்ள வேண்டி வரும் என அச்சத்திலும் உலக நாடுகள் உள்ளது.

உலகப் பொருளாதாரம் எவ்வளவு வேகமாக மீண்டு வர முடியும் என்பது குறித்து YouGov என்கிற சர்வதேச வர்த்தகச் சந்தை ஆய்வு நிறுவனம் சுமார் 26 நாடுகளில் நுகர்வோர் ஆகிய மக்கள் மத்தியில் ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது.

இந்த ஆய்வு உலக நாடுகள் எதிர்கொள்ளப் போகும் நிலையைப் புட்டுபுட்டு வைத்துள்ளது.

மக்கள்
கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் 50 சதவீதம் வர்த்தகம் மட்டுமே நடந்து வரும் நிலையில், அதிகளவிலான மக்கள் வேலைவாய்ப்பை இழந்தும், முழுமையான சம்பளம் பெறாத நிலையிலும் இருக்கிறார்கள். இது மட்டும் அல்லாமல் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் வேலை இழக்க நேரிடம் என்ற அச்சத்திலும் உள்ளனர்.

இதன் காரணமாக உலக நாடுகளில் இருக்கும் மக்கள், கையில் இருக்கும் பணத்தை அடிப்படைத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இதுமட்டும் அல்லாமல் முதலீடு செய்யவோ, எதிர்காலத் திட்டத்திற்காகவோ செலவு செய்யத் தற்போது மக்கள் தயாராக இல்லை.

காலம் தேவை இதோடு விமானம், ஹோட்டல், சேவைத் துறை சார்ந்த கடைகள் 100% சதவீதம் திரும்பவும் இயங்க வேண்டும் என்பது விரைவில் நடக்கக் கூடிய காரியமில்லை. இதனால் மொத்த வர்த்தகச் சந்தையும் முழுமையாக இயங்க நீண்ட காலம் ஆகும் என இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதும் தெரிவிக்கிறது.