Home » குமரி செய்திகள் » உடல்நல குறைவால் இறந்த போலீசார் குடும்பத்திற்கு உதவி
04

உடல்நல குறைவால் இறந்த போலீசார் குடும்பத்திற்கு உதவி

குமரி மாவட்டத்தில் உடல்நல குறைவால் இறந்த போலீஸ் ஏட்டு குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது. ஆரல்வாய்மொழி போலீஸ் ஸ்டேசனின் ஏட்டாக பணிபுரிந்தவர் சுரேஷ்குமார்.

இவர் கடந்த மாதம் 3ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு அவருடன் 1997ம் ஆண்டு பணியில் சேர்ந்த போலீசார் 8 லட்சத்து 25 ஆயிரத்து 300 ரூபாய் நிதியை மாவட்ட போலீஸ் கூடுதல் எஸ்.பி ஈஸ்வரன் தலைமையில் போலீசார் இல்லத்திற்குச் சென்று அவரது மனைவி ரஜினியிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் அவருடன் பணிபுரிந்த போலீசார் கலந்து கொண்டனர் . அதிக நிதி சேர்க்க குமரி மாவட்ட போலீஸ் ஏட்டுகள் ஜெயராஜ், பால்சேவியர், பிஜூ, மயிலாடுதுறையைச் சேர்ந்த ஏட்டு ராஜராஜன் பங்காற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.