Home » உலகச்செய்திகள் » உக்ரைனின் ஒருமைப்பாட்டை ரஷியா மீறுகிறது: ஐ.நா.சபை தலைவர்!
202202221115493097_Russias-recognition-of-Donetsk-Luhansk-violates-Ukraines_SECVPF

உக்ரைனின் ஒருமைப்பாட்டை ரஷியா மீறுகிறது: ஐ.நா.சபை தலைவர்!


Notice: Undefined index: tie_hide_meta in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/includes/post-meta.php on line 3

உக்ரைன் விவகாரத்தில் திடீர் அறிவிப்பாக, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார். 

இதற்கு அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன. ரஷியாவின் அறிவிப்பை தொடர்ந்து, உக்ரைன் விவகாரம் தொடர்பாக  ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை நடத்த அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் கோரிக்கை விடுத்தன. உக்ரைன், அமெரிக்கா, 5 ஐரோப்பிய நாடுகள் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தின் முடிவில்  ஐ.நா. சபை தலைவர் ஆண்டனியோ குட்ரெஸ் கூறியதாவது, “ரஷியாவின் முடிவு  உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மீறுவதாகும். மேலும், ரஷியாவின் முடிவு ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் கொள்கைகளுக்கு முரணானது.
கிழக்கு உக்ரைனில் நிலவும் மோதலுக்கு அமைதியான தீர்வு காண வேண்டும். 2202 (2015) தீர்மானத்தில் பாதுகாப்பு கவுன்சில் அங்கீகரித்த மின்ஸ்க் ஒப்பந்தங்களின்படி கிழக்கு உக்ரைனில் நடந்த மோதலுக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும்.
போர்கள் உடனடியாக நிறுத்தப்படுவதை உறுதி செய்தல், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் உள்கட்டமைப்பு, மற்றும் உக்ரைன் விவாகாரத்தில் பதற்றத்தை அதிகரிக்க செய்யும் எந்த செயல்களிலும் ஈடுபட கூடாது.
உக்ரைனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு முழுமையாக ஐக்கிய நாடுகள் சபை, தொடர்புடைய பொதுச் சபை தீர்மானங்களுக்கு இணங்க, ஆதரவளிக்கிறது.”
இவ்வாறு ஐ.நா. சபை தலைவர் தெரிவித்தார்.
உக்ரைன் விவகாரத்தில் இணக்கமான தீர்வு எட்டப்பட வேண்டும்  என்று இன்று நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசுப் பகுதிகளில் புதிய முதலீடுகள், வர்த்தகம் மற்றும் நிதியுதவிகளை அமெரிக்கர்களால் தடைசெய்யும் நிர்வாக ஆணையில் ஜனாதிபதி ஜோ பிடன் கையெழுத்திட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.


Notice: Undefined index: tie_hide_share in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/single.php on line 65