Home » கன்னியாகுமரி செய்திகள் » ஈரோட்டில் திங்கள்சந்தை பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற ஆட்டோ டிரைவர் எரியும் தீயுடன் கட்டிப்பிடித்ததால் கணவரும் உடல் கருகினார்

ஈரோட்டில் திங்கள்சந்தை பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற ஆட்டோ டிரைவர் எரியும் தீயுடன் கட்டிப்பிடித்ததால் கணவரும் உடல் கருகினார்

 ஈரோட்டில் திங்கள்சந்தை பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற ஆட்டோ டிரைவர் எரியும் தீயுடன் கட்டிப்பிடித்ததால் கணவரும் உடல் கருகினார்

ஈரோட்டில்
திங்கள்சந்தை பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற ஆட்டோ டிரைவர்
எரியும் தீயுடன் கட்டிப்பிடித்ததால் கணவரும் உடல் கருகினார்

ஈரோடு, ஜன.7-

ஈரோட்டில் குடும்பத்தகராறு காரணமாக மனைவியை டிரைவர் உயிரோடு எரித்து கொன்றார். எரியும் தீயுடன் மனைவியை கட்டிப்பிடித்ததால் அவரும் உடல் கருகினார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குடும்பத்தகராறு

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை பகுதியை சேர்ந்தவர் திவாகரன். அவருடைய மனைவி கோமதி. கூலித்தொழிலாளிகள். இவர்களுடைய மகள் ரம்யா (வயது 27).

ரம்யாவுக்கும், ஈரோட்டை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் மூர்த்தி என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவனும்-மனைவியும் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள சேக்கிழார் வீதியில் குடும்பம் நடத்தி வந்தனர்.

மூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கு கடன் ஏற்பட்டது. கடன் தொல்லையால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது.

மனைவியை கொளுத்தினார்…

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மூர்த்தி குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதன்காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ‘உன்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்துவதை விட சாவதே மேல்‘ என்று கூறி வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ரம்யா ஊற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.

உடனே மூர்த்தி நானே உன்னை கொளுத்திவிடுகிறேன் என்று தீப்பெட்டியில் இருந்து தீக்குச்சியை எடுத்து உரசி அவர் மீது வீசியதாக தெரிகிறது. ஏற்கனவே மண்எண்ணெயால் நனைந்திருந்த ரம்யா மீது தீ குபீரென்று பிடித்து எரிந்தது. உடலில் தீப்பற்றி எரிந்ததும் அவர் அலறி துடித்தார்.

பரிதாப சாவு

இதனைக்கண்ட மூர்த்தி நானும் உன்னோடு செத்துவிடுகிறேன் என்று தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்த தனது மனைவியை கட்டிப்பிடித்தார். இதில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்கள் 2 பேரையும் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரம்யா பரிதாபமாக செத்தார்.

கொலை வழக்காக மாற்றம்

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து முதலில் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் மூர்த்தி தனது மனைவியை உயிரோடு எரித்து கொன்ற விவரம் தெரியவந்தது. இதனையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

இந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மூர்த்தி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.