Templates by BIGtheme NET
Home » உலகச்செய்திகள் » இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்தவேண்டும் முன்னாள் அதிபர் ராஜபக்சே கோரிக்கை
Sri-Lanka-should-dissolve-parliament-and-hold

இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்தவேண்டும் முன்னாள் அதிபர் ராஜபக்சே கோரிக்கை

கொழும்பு,

இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்டது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணும் பணி தொங்கியது. மொத்தமுள்ள 341 உள்ளாட்சி கவுன்சில்களில் 340 கவுன்சில்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சே தலைமையிலான இலங்கை மக்கள் கட்சி 230 கவுன்சில்களை கைப்பற்றி அமோக வெற்றி கண்டது.

அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சிக்கும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சிக்கும் மிகக் குறைவான கவுன்சில்களே கிடைத்தன.

இதைத்தொடர்ந்து ராஜபக்சே நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “தற்போதைய அரசு தனது பெரும்பான்மையை இழந்துவிட்டது. மக்களிடம் புதிய பாராளுமன்றத்தை தேர்வு செய்யவேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டு உள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க அரசு பரிசீலித்து வருவதையும், அரசு சொத்துகள் விற்கப்படுவதையும் மக்கள் விரும்பவில்லை. இதன் காரணமாகவே எனது கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்பி வாக்களித்து இருக்கின்றனர். எனவே பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்துவிட்டு தேர்தலை நடத்தவேண்டும்” என்றார்.