பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » குமரி செய்திகள் » இரயுமன்துறையில் விசைப்படகு கவிழ்ந்து மாயமான மீனவரின் சடலம் மீட்பு
kim_2

இரயுமன்துறையில் விசைப்படகு கவிழ்ந்து மாயமான மீனவரின் சடலம் மீட்பு

தேங்காய்ப்பட்டனம் துறைமுக முகத்துவாரம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் விசைப்படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவர் நீண்ட நேர தேடுதலுக்குப் பின் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சடலமாக மீட்கப்பட்டார்.கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் பகுதியைச் சேர்ந்த மரியதாசன் மகன் சஜின் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த கமலியாஸ் மகன் இக்னேஷியஸ் (42) உள்பட 11 மீனவர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் இரயுமன்துறை பகுதியில் உள்ள தேங்காய்ப்பட்டனம் மீன்பிடித் துறைமுக முகத்துவாரம் (ஆறு கடலில் கலக்கும் பொழிமுகம்) பகுதியிலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.

அப்போது கடல் சீற்றம் அதிகமாக இருந்ததையடுத்து, துறைமுகப் பகுதியிலேயே விசைப்படகு கவிழ்ந்தது. இதில் இக்னேஷியஸ் உள்பட 3 மீனவர்கள் கடலில் மூழ்கி தத்தளித்தனர். இதில் 2 மீனவர்களை அப்பகுதி மீனவர்கள் மீட்டனர். மேலும் கடலில் மூழ்கி மாயமான மீனவர் இக்னேஷியஸ்ஸை அப்பகுதி மீனவர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.இதையடுத்து வெள்ளிக்கிழமை பிற்பகலில் இக்னேஷியஸின் சடலத்தை அவர்கள் மீட்டனர். இது குறித்து குளச்சல் கடலோர காவல்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.