பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » கன்னியாகுமரி செய்திகள் » இரணியல் அருகே வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடியாததால் தொழிலாளி தற்கொலை
Worker-suicide-due-to-inability-to-go-to-work-abroad

இரணியல் அருகே வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடியாததால் தொழிலாளி தற்கொலை

இரணியல்,

இரணியல் அருகே காரங்காடு காட்டுவிளையை சேர்ந்தவர் முருகன் (வயது 54). இவர் வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சமீபத்தில் ஊருக்கு திரும்பினார். மீண்டும் வெளிநாட்டு வேலைக்கு செல்ல முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அதற்கான உடல் பரிசோதனையில் தகுதி பெறாததால் வெளிநாடு செல்ல முடியாமல் மன வருத்தத்துடன் இருந்தார். இந்தநிலையில் நேற்று காலையில் வீட்டில் ஒரு அறையில் மின்விசிறியில் முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து அவருடைய மகன் சிவரஞ்சித் (26) இரணியல் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடியாததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.