Templates by BIGtheme NET
Dhanush-urges-santhanam-to-dont-call-again

இன்னொரு முறை அதை சொல்லாதீர்கள்: சந்தானத்திடம் சொன்ன தனுஷ்

`சக்க போடு போடு ராஜா’ இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் தனுஷ், சந்தானத்திடம் இன்னொரு முறை அதை சொல்லாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்.

விடிவி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் விடிவி கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் `சக்க போடு போடு ராஜா’ கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்திற்க நடிகர் சிம்பு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் தனுஷ் கலந்து கொண்டு படத்தின் பாடல்களை வெளியிட படக்குழுவினர் அதை பெற்றுக் கொண்டனர். இந்த விழாவில் சந்தானம், சிம்பு, தனுஷ், யுவன் சங்கர்ராஜா, இயக்குனர் ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதில் சந்தானம் பேசும் போது, தனுஷை ஹாலிவுட் நடிகர் என்று புகழ்ந்து பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய தனுஷ், அது இன்னொரு மொழி படம். அவ்வுளவு தான். அதற்கு மேல் பெரிதாக எதுவும் இல்லை. தொழிலை நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக வேறு மொழியில் நடிக்கும் படம் தான் அது.

அதேபோல் இன்னொரு முறை தன்னை ஒரு ஹாலிவுட் நடிகர் என்று சொல்லாதீர்கள் என்று தனுஷ் கேட்டுக் கொண்டார். சிம்பு அழைத்ததாலேயே இந்த விழாவிற்கு வந்தேன் என தனுஷ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*