இந்திய ஜனநாயக வாலிபர் சங்க குமரி மாவட்ட 19-வது மாநாடு குலசேகரத்தில் நேற்று மாலையில் தொடங்கியது. இதனையொட்டி களியல் அருகே அரகநாட்டிலிருந்து களியல் வட்டாரக் குழு தலைவர் சரத் மிதுன் சர்மா தலைமையில் வந்த சுதாகரன் நினைவு ஜோதியை குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு அருகில் உள்ள மாநாட்டு திடலில் முன்னாள் மாவட்ட தலைவர் ஸ்டாலின்தாஸ் பெற்றுக் கொண்டார். காஞ்சாம்புறத்தில் இருந்து முஞ்சிறை வட்டாரக் குழு செயலாளர் ரமேஷ் தலைமையில் கொடிமரத்தை கிள்ளியூர் வட்டார குழு செயலாளர் ரசல் ராஜ் பெற்றுக் கொண்டார். திருவட்டாரில் இருந்து வட்டாரக் குழு செயலாளர் லிபின் தலைமையில் வந்த கொடியை மாவட்ட துணைத் தலைவர் விபின் பெற்று கொண்டார். நாகர்கோவிலில் இருந்து மாநகர ஒருங்கிணைப்பாளர் ஷாஜன் தலைமையில் வந்த கொடிக்கயிற்றை மாவட்டக் குழு உறுப்பினர் விஷ்ணு பெற்றுக் கொண்டார். தொடர்ந்து மாவட்ட துணைத் தலைவர் ஷாஜூ கொடியேற்றி வைத்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ரெதீஷ் தலைமை தாங்கினார். வரவேற்புக் குழு தலைவர் ராஜூ வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிந்து அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் எட்வின் பிரைட் வேலை ஸ்தாபன அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட பொருளாளர் பிரவீன் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார். மாநாட்டின் 2-வது நாளான இன்றும் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. நிறைவு நாளான நாளை மாலையில் குலசேகரம் கல்லடிமாமூடு சந்திப்பிலிருந்து பேரணியும், தொடர்ந்து அரசமூடு சந்திப்பில் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க குமரி மாவட்ட மாநாடு ;குலசேகரத்தில் தொடங்கியது
Notice: Undefined index: tie_hide_meta in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/includes/post-meta.php on line 3
Notice: Undefined index: tie_hide_share in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/single.php on line 65