Templates by BIGtheme NET
hcl-software-company

இந்திய ஐடி துறையை புரட்டிப் போட்ட அப்பாவும்.. மகளும்..!

சென்னை: தமிழகத்தின் சிறு கிராமத்தில் இருந்து சென்று இந்தியா தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் துறை வளர்ச்சியில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடாரின் வெற்றிப் பாதையை இங்குப் பார்ப்போம். இந்தக் கட்டுரையில் நாம் ஹெச்.சி.எல் நிறுவனம் எப்போது துவங்கப்பட்டது, அதன் முதலீடு எவ்வளவு என்பது உட்படப் பல சுவாரஸ்யமான தகவல்களை இங்கு உங்களுக்காகச் சுருக்கமாக வழங்குகின்றோம். தமிழகத்தில் எளிமையான இந்து குடுப்பத்திற்குப் பிறந்த ஷிவ் நாடார் உலகளவில் தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் பிரபலமான ஒருவர் மற்றும் எச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரும் ஆவார். ஆரம்பக்கால வாழ்க்கை அவரது வாழ்க்கை புனேவில் உள்ள வால்சண்ட் குழுவின் கூப்பர் இஞ்ஜினியரிங் நிறுவனத்தில் தொடங்கியது என்று கூறலாம். பின்னர் அங்கு ஒரு வணிகத்தை எடுத்து நடத்துக்ம் அளவிற்கான அனுபவத்தைப் பெற்ற பிறகு வெளியில் வந்த ஷிவ் நாடார் தனது நன்பர் மற்றும் பிற வணிகக் கூட்டாளர்களுடன் சேர்ந்து சொந்தமாக வியாபாரத்தைத் துவங்கினார். பின்னர் இது தான் இவ்வளவு பெரிய நிறுவனத்தைத் துவங்க காரணமானது. முதல் வியாபாரம் மைக்ரோ கார்ப் என்ற பெயரில் முதன் முதலாக ஒரு நிறுவனத்தைத் துவங்கி அதன் மூலம் டிஜிட்டல் கால்க்குலேட்டர்களை விற்று வந்தார். ஹெச்.சி.எல் உருவாக்கம் பின்னர் 1976-ம் ஆம் ஆண்டு ஹெச்.சி.எல்நிறுவனத்தைத் துவங்கினார். அதன் மதிப்பு இன்று பல நூறு கோடிகளைத் தாண்டும். முதலீடு ஹெச்.சி.எல் நிறுவனத்தை முதன் முதலாக ஷிவ் நாடார் துவங்கும் போது வெறும் 1,87,000 ரூபாய் முதலீட்டில் தான் துவங்கினார். இப்போது இந்த நிறுவனம் உலகம் முழுவதும் தனது வர்த்தகத்தைச் செய்து வருகின்றது. வெளிநாடுகளில் நுழைவு வெளிநாடுகளில் தனது வணிகத்தைச் செய்ய விரும்பிய ஷிவ நாடாருக்கும் முதன் முதலாகத் தனது தகவல் தொழில்நுட்ப சேவை அளிக்க வாய்ப்புப் பெற்றது ஆகும். இப்போது நிறுவனத்தின் பெறும் பகுதியான பங்குகள் இவரிடம் இருக்கும் போதிலும் தனது நிர்வாகத்தை இப்போது இவர் வழிநடத்துவதில்லை. ஆசியா அளவில் முதன்மை நிறுவனம் தகவல் தொழில்நுட்ப திறையில் ஆசியா அளவில் முதன்மை நிறுவனமாக உள்ள ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவரான ஷிவ் நாடார் தனது ஊழியர்களுடன் தாராளமாக இயல்பாகப் பழகக்கூடியவர். ஊழியர்களுக்கு வெகுமதிகள் இவரது நிறுவனத்தில் பணி புரியும் சிறந்த ஊழியர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் கார், சம்பளத்துடன் விடுமுறை எனப் பல சலுகைகளை இவர் அளிப்பதினால் தகவல் தொழில்நுட்பம் உலகில் மிகப்பெரிய பரபரப்பை இவரது ஊழியர்கள் பரிசாக இவருக்கு அளித்திருக்கிறார்கள் என்று கூறலாம். அனைவரிடமும் மிகவும் அமைதியாக மற்றும் மென்மையாகப் பழகும் தன்மை இவரிடம் ஒரு தனிச் சிறப்பு. இந்திய தகவல் தொழில்நுட்ப துறையின் தந்தை ஷிவ் நாடார் அவர்களை இந்திய தகவல் தொழில்நுட்பத்தின் தந்தை என்றும் அழைக்கும் அளவிற்குத் தொழில்நுட்ப துறையில் பல சாதனைகளை இவர் புரிந்துள்ளார். வருவாய் ஹெச்.சி.எல் நிறுவனம் தந்து மொத்த வருவாயான 5.4 பில்லியன் டாலரில் ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர் லாபமாகப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. குடும்பம் ஷிவ் நாடாருக்குத் திருமன்ம் முடிந்து ஒரு பெண் பிள்ளை உண்டு, அவர்தான் ரோஷினி நாடார். இப்போது ஹெச்.சி.எல் நிறுவனம் இவரது பெருப்பில் தான் இயங்கி வருகின்றது. கல்வி நிறுவனங்கள் தனது தந்தையின் நினைவாகச் சிவா சுப்பிரமணிய நாடார் பெயரில் தான் சென்னையில் உள்ள எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியாய் இவர் நடத்தி வருகின்றார். இந்தக் கல்லூரியை துவங்க 1 கோடி ரூபாய் இவரது பங்காக இவர் அளித்துள்ளார். விதியா கயான் பள்ளி உத்திர பிரதேசத்தில் 50 மாவட்டங்களில் 20 மாணவர்களுக்கு இலவச கல்வி மற்றும் உதவித் தொகையை விதியா கயான் பள்ளி நிறுவனம் பெயரில் இவர் வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.