Templates by BIGtheme NET
gst-in-india

இந்தியா வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையங்களில் ஜிஎஸ்டி ரீபண்ட்:விரைவில் செயல்படுத்த முடிவு

புதுடெல்லி: வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாட்டுக்கு திரும்பும்போது ஜிஎஸ்டி ரீபண்ட் பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
வெளிநாட்டு பயணிகள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பொருட்கள் வாங்கும்போது, அதற்காக வசூலிக்கப்படும் வாட் அல்லது ஜிஎஸ்டி வரி அவர்களுக்கு திரும்ப அளிக்கப்படுகிறது. சில நாடுகளில் இந்த நடைமுறை உள்ளது. சிலர் போலியான ரசீதுகளை காட்டி ரீபண்ட் பெறுவதை தடுக்க அவர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பும்போது ரீபண்ட் வழங்கப்படுகிறது. இதுபோல் இந்தியாவிலும் ஜிஎஸ்டி ரீபண்ட் பெற அனுமதி உள்ளது. ஆனால், பெரிய வர்த்தகர்களிடம் வாங்கும் பொருட்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

இந்தியாவில் இதுபோல் வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாட்டுக்கு திரும்பும்போது விமான நிலையத்தில் ரீபண்ட் பெற்றுக்கொள்ளலாம் என வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், குறிப்பிட்ட அளவுக்கு மேல் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டியை திரும்பப்பெற சட்டத்தில் விதிகள் உள்ளன. இவர்கள் சுற்றுலா விசாவில் வந்து தங்கினாலும், இந்தியாவில் வசிப்பவராக கருதப்பட மாட்டார்கள். அதாவது, 6 மாதங்களுக்கு மிகாமல் இந்தியாவில் தங்கும் நபர்கள் இவ்வாறு கருதப்படுவார்கள். இவர்கள் போலி ரசீதுகள் மூலம் ஜிஎஸ்டி பெறுவதை தடுக்கும் வகையில், வெளிநாடு திரும்பும்போது விமான நிலையத்தில் ரீபண்ட் அளிக்கப்படும். இது விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஆன்லைன் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வர்த்தகர்கள் மற்றும் ரீபண்ட் ஏஜென்சியினர் ஒரே தளத்தில் செயல்படுகின்றனர். இதனால் எந்த பிரச்னையும், நடைமுறை சிக்கல்களும் இன்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எளிதாக ரீபண்ட் பெற முடிகிறது. இதுபோன்று மிக எளிதாக இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சுற்றுலா மற்றும் தொழில் துறையினர் வலியுறுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.