Templates by BIGtheme NET
Home » இந்தியா செய்திகள் » இந்தியா–பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மத்திய அரசு உறுதி செய்தது
IndiaPakistan-Officials-negotiate-The-central-government

இந்தியா–பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மத்திய அரசு உறுதி செய்தது

புதுடெல்லி,

இந்தியா, பாகிஸ்தான் இடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்பு தாய்லாந்தில் கடந்த மாதம் 26–ந் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், பாகிஸ்தான் ஆலோசகர் நசீர் கான் ஜனுஜா ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்து உள்ளதை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தற்போது உறுதி செய்தது.

இது குறித்து அந்த அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் செய்தியாளர்களிடம், இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிகாரிகள் மட்டத்தில் வெளிநாடுகளில் பேச்சுவார்த்தை நடத்துவது ஒன்றும் புதிது அல்ல. கடந்த மாதம் நடந்த பேச்சுவார்த்தையில் எல்லை தாண்டிய பயங்கரவாதம், பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்து இரு தரப்பிலும் ஆலோசனை நடத்தினர். மேலும் குல்பூ‌ஷன் ஜாதவ் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் சிறையில் நடந்த அவமானம் குறித்தும் அஜித் தோவால் குறிப்பிட்டு பேசினார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க இரு தரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார்.

குல்பூ‌ஷன் ஜாதவை அவருடைய மனைவி, தாய் பாகிஸ்தான் சிறையில் சந்தித்த அடுத்த நாள் இந்த சந்திப்பு தாய்லாந்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.