பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » இந்தியா செய்திகள் » இந்தியா தன் தவறை உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும்: ராஜ்நாத் சிங்கிற்கு சீனா பதில்
579917

இந்தியா தன் தவறை உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும்: ராஜ்நாத் சிங்கிற்கு சீனா பதில்

எல்லையில் சீனா படைகளை பெருக்கி வருகிறது இதன் மூலம் 1993, 1996 எல்லை உடன்படிக்கைகளை சீனா மீறுகிறது என்று நாடாளூமன்றத்தில் ராஜ்நாத் சிங் தெரிவித்ததற்கு சீனா பதிலளித்துள்ளது.

ராஜ்நாத் சிங் கூறியது பற்றி சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் இடம் கேள்வி எழுப்பியபோது, அவர் கூறியதாவது:
தற்போதைய எல்லை நிலவரங்களுக்குப் பொறுப்பு சீனாவிடத்தில் இல்லை. இப்போதைக்கு மிகவும் அவசரமான முக்கியம் காரியம் என்னவெனில் இந்தியா தன் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்பதே. தன் தவற்றை இந்தியா திருத்திக் கொள்ள வேண்டும். தரைப்படைகளை விலக்கிக் கொண்டு தூலமான நடவடிக்கைகள் மூலம் பதற்றத்தைத் தணிக்குமாறு நடந்து கொள்ள வேண்டும்.

இந்தியப் படைகள்தான் உடன்படிக்கைகளை மீறுகிறது. முதலில் ஊடுருவி சீனப் படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது இந்தியப்படைகளே.

செப்.10 அன்று இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் இடையே ஏற்பட்ட 5 அம்ச திட்டத்தை இந்தியா கடைப்பிடிப்பதோடு முந்தைய உடன்படிக்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். சீன-இந்தியா உறவுகள் என்ற ஒரு பெரிய சித்திரத்தை மனதில் கொண்டு எல்லை விவகாரத்தில் முறையான இடத்தில் வைக்க முன் வரவேண்டும், என்றார்.

ஆனால் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் அதிகப் படைகளை எல்லையில் குவிக்கிறது என்றும் ஆயுதங்களையும் குவிக்கிறது மோசமான ஒன்றுக்கு தயாராகி வருகிறது என்று ஹாங்காங்கில் உள்ள சவுத்-சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.