Templates by BIGtheme NET
Indore-Bhopal-Chandigarh-cleanest-cities-in-India

இந்தியாவின் தூய்மையான நகரங்கள் இந்தூர், போபால், சண்டிகர் – ஆய்வில் தகவல்

புதுடெல்லி:

இந்தியாவின் தூய்மையாக இருக்கும் நகரங்கள் குறித்து மத்திய அரசு சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகளை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத்துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி வெளியிட்டார்.

அந்த பட்டியலில் இந்தூர், போபால், சண்டிகர் ஆகியவை தூய்மையான நகரங்கள் என கூறப்பட்டுள்ளது. மூன்று லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகராட்சிகளின் பட்டியலில் புதுடெல்லி நகராட்சி முதலிடம் பிடித்துள்ளது. அதேபோல் மாநில தலைநகரங்களின் பட்டியலில் கிரேட்டர் மும்பை முதலிடம் வகிக்கிறது.

10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பெருநகரங்களில் விஜயவாடா முதலிடத்தில் உள்ளது. தூய்மை நகரங்களின் பட்டியலில் 3 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான மக்கள்தொகை கொண்ட பட்டியலில் மைசூரு நகரம் முதலிடம் பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.