Home » உலகச்செய்திகள் » இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டி புதிய கருத்து கணிப்பில் லிஸ் ட்ரஸ் முன்னேற்றம்

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டி புதிய கருத்து கணிப்பில் லிஸ் ட்ரஸ் முன்னேற்றம்


Notice: Undefined index: tie_hide_meta in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/includes/post-meta.php on line 3

இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், அவரது கன்சர்வேடிவ் கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பால், பிரதமர் பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தார். செப்டம்பர் 5-ந் தேதிக்குள் பழமைவாத கட்சியை சேர்ந்த 1 லட்சத்து 80 ஆயிரம் உறுப்பினர்கள் ஓட்டு போட்டு புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க உள்ளனர். இத்தேர்தலில், வெளியுறவு மந்திரி லிஸ் ட்ரஸ்சும், இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனாக்கும் போட்டியிடுகின்றனர். முந்தைய கருத்து கணிப்பில் லிஸ் ட்ரஸ் முன்னிலையில் இருந்தார். இதற்கிடையே, கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட 2-வது கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், 58 சதவீதம் பேர் லிஸ் ட்ரஸ்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 26 சதவீதம் பேர், ரிஷி சுனாக்குக்கு ஆதரவு தெரிவித்தனர். முடிவு செய்யவில்லை என்று மீதி நபர்கள் கூறினர்.


Notice: Undefined index: tie_hide_share in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/single.php on line 65