Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » ஆரல்வாய்மொழியில் நான்கு வழி சாலை பணியை மத்திய அமைச்சர் திடீர் ஆய்வு
aralvaimozhi-four-road

ஆரல்வாய்மொழியில் நான்கு வழி சாலை பணியை மத்திய அமைச்சர் திடீர் ஆய்வு

ஆரல்வாய்மொழி, பிப்.14: ஆரல்வாய்மொழியில் நான்கு வழி சாலை பணிகளை மத்திய அமைச்சர் திடீர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க கூறினார். காவல் கிணறு முதல் பார்வதிபுரம் வரை நான்கு வழி சாலைக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் சரி செய்து மண் நிரப்பும் பணியும், சில இடங்களில் சிமெண்ட் கலவை போடும் பணிகளும், மேம்பாலங்கள் பணியும் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு செய்தார்.

பால பணியினையும், சிமெண்ட் கலவை போடுகின்ற இடத்தினையும், மண் நிரப்புகின்ற இடத்தினையும் பார்வையிட்ட மத்திய அமைச்சர் அங்கு வந்த அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், இணைப்பு சாலைகளை பற்றியும் பேசினார். இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், மாவட்ட இளைஞர் அணி பார்வையாளர் பத்பநாபன், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.