Home » கன்னியாகுமரி செய்திகள் » ஆப்த மித்ரா ” பேரிடர் மீட்பாளர்களுக்கான பயிற்சி

ஆப்த மித்ரா ” பேரிடர் மீட்பாளர்களுக்கான பயிற்சி


Notice: Undefined index: tie_hide_meta in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/includes/post-meta.php on line 3

தேசிய பேரிடர் மேலாண்மை ஆப்த மித்ரா ( பேரிடர் கால நண்பன் ) திட்டம் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மூலமாக தமிழ்நாட்டில் 16 மாவட்டத்தில் செயல்படுத்த இருக்கிறது. கிராம தன்னார்வலர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பிரத்தியேக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்து பேரிடர் மீட்பாளர்களாக உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தை முதன் முதலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில்(ICDM) துவங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 300 பேரிடர் மீட்பாளர்களை உருவாக்க தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை அனுமதி அளித்து முதல் கட்டமாக 200 தன்னார்வலர்களை குழுக்களாக பிரித்து அவர்களுக்கு 12 நாட்கள் பல கட்டங்களாக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சியின் ஒரு பகுதியாக இன்று நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு திடலில் 30 பேருக்கு நீரில் தத்தளிப்பவர்களை மீட்கும் பிரத்யேக நீச்சல் பயிற்சி வழங்கப்பட்டது. மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் திரு. ஆழிவாசன் வெள்ள அபாயங்களில் மக்களை காப்பாற்றுவது குறித்து பயிற்சி அளித்தார். ICDM பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் திருமதி. சோனியா மெரச


Notice: Undefined index: tie_hide_share in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/single.php on line 65