Home » கன்னியாகுமரி செய்திகள் » ஆட்டோ டிரைவர் மர்மச்சாவு

ஆட்டோ டிரைவர் மர்மச்சாவு


Notice: Undefined index: tie_hide_meta in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/includes/post-meta.php on line 3

தக்கலை அருகே உள்ள வேர்க்கிளம்பி, காப்புவிளையை சேர்ந்தவர் ராஜூ(வயது 54), ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். ராஜூ அழகியமண்டபம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஆட்டோவுடன் அழகியமண்டபத்தில் நின்று கொண்டிருந்தார். நேற்று காலை ஆட்டோ நிறுத்தத்துக்கு வந்த சக டிரைவர்கள் ராஜூவின் ஆட்டோ நிற்பதை கண்டனர். அவர்கள் அருகில் சென்று பார்த்தபோது, ஆட்டோவில் ராஜூ மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து ஆட்டோவில் பிணமாக கிடந்த ராஜூவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ராஜூ எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Notice: Undefined index: tie_hide_share in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/single.php on line 65