Templates by BIGtheme NET
Home » இந்தியா செய்திகள் » ஆட்சி மாற்றத்துக்கு தருணம் வந்து விட்டது: மோடி மீது சத்ருகன் சின்கா பாய்ச்சல்
The-time-has-come-for-regime-change-Shatrughan-Sinha-leap

ஆட்சி மாற்றத்துக்கு தருணம் வந்து விட்டது: மோடி மீது சத்ருகன் சின்கா பாய்ச்சல்

பாட்னா,

முன்னாள் மத்திய மந்திரியும், பீகார் மாநிலம், பாட்னாசாகிப் தொகுதி எம்.பி.யுமான சத்ருகன் சின்கா, பா.ஜனதாவில் அதிருப்தியாளராக உள்ளார். பிரதமர் நரேந்திரமோடியையும், பா.ஜனதா கட்சி தலைமையையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்தநிலையில் பிரதமர் மோடியை நேரடியாக சாடி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர், “தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டாகி விட்டது. மத்தியில் ஆட்சி மாற்றத்துக்கான சரியான, உகந்த நேரம் வந்தாகி விட்டது; புதிய, சிறந்த தலைமை வரவேண்டும் என்று நீங்கள் நினைக்க வில்லையா? நீங்கள் உங்களின் அனைத்து கருப்பு, வெள்ளை, சாம்பல் நிற பக்கங்களுடன் வெளியே வர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.